என் பெயர் ராணி ப.சிவன். ஏறக்குறைய ஆறு வருடங்கள் கோயம்புத்தூர் திரு அவினாசிலிங்கம் மனையியற் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளேன். அதன் பிறகு ஒரு பத்து வருடங்கள் முதல் நிலையில் உதவி ஆசிரியராகவும் பின்பு ஆசிரியராகவும் பெண்களுக்கான பத்திரிகையாக விளங்கிய ‘சுமங்கலி’யில் வேலை செய்தேன்.
உயர்நிலைப் பள்ளிக்கூடம், கல்லூரி, கல்லூரி விடுதி, போகின்ற இடங்கள், ஊர்கள், மனிதர்கள், உறவினர்கள், பெற்றோர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், தோழிகள், நமது வாழ்க்கை, பிறர் வாழ்க்கை – இப்படி மேற்சொன்னவைகளிலிருந்து பார்த்த, கேட்ட நடவுகளைப் பற்றி நான் உங்களிடம் சொல்லப் போவது தான் ‘பார்த்ததும் கேட்டதும்’!
இவையன்றி இடையிடையே சிறுகதைகள் மற்றும் கவிதைகளையும் தருகிறேன்.
இவற்றில் என் கருத்துக்களையும் அனுபவங்களையும் சொல்வதால்... இதை ஏற்க முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்... முடியவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். இந்த நாட்டில் மகாத்மாவையே குற்றம் சொல்பவர்கள் உண்டு! நான் எம்மாத்திரம்? பிடிக்கவில்லை என்றால் எடுத்துரையுங்கள்! அம்பு கொண்டு பாய்ச்சாதீர்கள். அன்போடு சொல்லுங்கள்!
நன்றி... நன்றி!