நான் இல்லாமல் போய்விட்டேன்…

நீ பார்க்கும்போது
வேர்க்கிறேன்.
பழகும்போது
பரிதவிக்கிறேன்.
உணரும்போது
உருகுகிறேன்.
தொட்டுவிட்டாலோ
துவண்டுவிடுகிறேன்.
இதழ் பட்டுவிட்டாலோ
இல்லாமலே போய் விடுகிறேன்!