என் வாழ்க்கை…

Mother-Father
இரு-பத்துக் கூட்டணி ஆறில்
நான் ஒருத்தி (கன்னி),
இரு-பத்துக் கூட்டணி ஏழில்
நான் இரண்டு ஆனேன் (கணவர்)
ஆண்டுகள் ஐந்தில்
பெண்டுகள் இரண்டு
சாதனைகளைத் தேடி ஓடியபோது
வேதனைகள் எனை வேதனைச் செய
உலகம் புரியாமல் தடுமாற
உந்தி எழச் செய்த முயற்சி
பிந்திக் கழுத்தில் ஓர் அறை விட்டு
முந்திப் போ முந்திப் போ
எனச் சொன்ன சக்திகள் எவை?
என்னைப் பெற்று எடுத்து
பின்னை வாழும் முறைக் கற்றுத்
தன்னை உணரச் செய்து
அகில உலக அறத்தைச் சொல்லி
முன்னை இந்த உலகிற்களித்த
என் தாயும் தந்தையுமே…
மீனாட்சி, ஜோதி ராமலிங்கம்
வாழ்க! வாழ்கவே!!