இன்னும் எதை இழக்க?

உன் பார்வையே
என் பார்வை,
எனவே குருடானேன்.
நீ கேட்பதே
நான் கேட்பதால்,
செவிடானேன்.
உன் பேச்சு
என் பேச்சானதனால்,
ஊமையானேன்.
இன்னும் எதை இழக்க?
உன் உயிர் என் உயிர் ஆனதனால்…
என்னை விடம்மா…
உயிரிழக்கச் சம்மதமில்லை,
ஓடிப்போகிறேன்!