வேதனை தீரடி

பாவை உந்தன் பார்வையால்
பாலும் கசந்ததடி,
உந்தன்
சேல் கண் சிவந்ததடி,
எந்தன்
வேல் கண் அழுததடி,
நித்திரை போனதடி,
நிம்மதி குலைந்ததடி,
நேசம் துடிக்குதடி,
பாசம் பதறுதடி,
வேஷம் இல்லையடி,
நாலும் மறந்து
எந்தன்
வேதனை தீரடி!