யாருமே தேவையில்லை… நிம்மதி!

அவனுக்குப்…
பணம் தேவையில்லை…
பெண்டு பிள்ளைகள் தேவையில்லை…
அம்மா… அப்பா…
அண்ணன்… தங்கை…
உற்றார்… உறவினர்…
ஏன்,
உலகமே தேவையில்லை…
துறவியா?
முற்றும் துறந்த ஞானியா?
அப்போது ஒரு குரல்…
“ஐய்யாமார்களே…
நேரமாகுது…
சீக்கிரம் வாய்க்கரிசி போடுங்களேன்”!