வயது தடை இல்லை!

jump photo
நாலு எட்டில் நாலு மாடி,
எட்டு எட்டில் எட்டு மாடி,
பத்து எட்டில் அத்தை வீடு,
இருபது எட்டில் இன்பா வீடு,
என்று –
மான் எனத் துள்ளியவள்,
இப்போது…
தாவித் தாவிக் காலை வைத்தாலும்,
தெருமுனை நீளம் விடியவில்லையே…
இந்த அறுபதில் அல்லாடுகிறேனே…
இனி -
எழுபதில் என்னவாகும்
என்றீர்கள் என்றால்…
எகிறிக் குதிப்பேன்!
எட்டி வானத்தைத் தொடுவேன்!
உக்கும்…!!