உன்னைப் புரியவே இல்லை!

பூமியை அளந்துவிட்டேன்
சாமியையும் தெளிந்து கொண்டேன்
நரசிம்மராவின்
நமுட்டுச் சிரிப்பை அறிந்து கொண்டேன்
ஏன்…
மன்மோகன்சிங்கின்
மௌனத்தையே புரிந்துகொண்டேன்
நட்சத்திரங்களின் தொகையும்
பட்சமாக எனக்குத் தெரியும்
ஆனால்…
தோகை உந்தன் மனம்
எனக்குப் புரியவில்லையே…
சத்தியமாகத் தெரியவில்லையே!