கவிதை

காசுக்கு இரண்டு பக்கங்கள்…

குழந்தைப் பருவத்தில்  தத்துக் கொடுக்கப்பட்டேன்! தளிர் ஆக இருந்த நான் துளிர் விட்டு வளர்ந்தேன். ஓர் ஆறேழு வயதிருக்கும்… வம்பில் வாய் வளர்ப்போர் அம்பில் நஞ்சு கலந்து “நீ ஒரு தத்துப் பிள்ளை” என… அங்ஙனமாயின் எங்ஙனம் நான் தத்துக் கொடுக்கப்பட்டேன்? என் அம்மா அப்பா யார்? பெற்று எடுத்து என்னைத் தத்து கொடுத்தது ஏன்? தடுமாற்றத்துடன்…

அரசன் அன்று கொல்வான்…

தாங்காத துயர் பட்டு அல்லல்பட்டு அவதிப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் முற்றுகை இட்ட நாளில் பற்றுவதற்கு கையில்லா நிலையில் தூற்றுவதற்கு யாருமில்லா நிலையில் நடவுகளைப் பார்க்காமல் கடவுள் கடல் கடந்து சென்றுவிட்டான் என்றேன்! இல்லை… இப்போதுதான் அவன் திரும்பவும் மெல்ல எட்டிப் பார்க்கிறான்… பரிதவிப்புடன் பயந்து பாழும் மக்கள் பட்ட அவதிக்கு ரணம் ஆற மருந்து…

தத்துப் பிள்ளைகள்

பத்து மாதம் சுமக்காத தத்துப் பிள்ளை எனினும்… பார்த்துப் பார்த்து வளர்த்து பூச்சு கடிச்சுதா புழு கடிச்சுதா கொசு கடிச்சுதா வண்டு கடிச்சுதான்னு, வாஞ்சையா வாளமீனும் வஞ்சிரமும் வெராலும் வக்கணையா வடிச்சுப் போட்டு, எம்புள்ள எம்புள்ளன்னு எட்டு உலகம் கேக்க… தத்துப் பிள்ளை சொந்தப் பிள்ளைப் போல் அம்மா! அப்பா!ன்னு அழைப்பதைப் பார்த்து புளகாங்கிதப் பூரிப்புடன்…

அவர்கள் அழுகிறார்கள்…

Photo by DFAT photo library பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த சிசுவைப் பலிகொடுத்தத் தாயும்… சிறுவன் சிறுமியைப் பலிகொடுத்தத் தாயும்… சிங்க நடையுடன் சீறிப் பாய்ந்த இளைஞனை இளம் பலி கொடுத்தத் தாயும்… கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்ணை காவு கொடுத்தத் தாயும்… கதறக் கதற கற்புச் சீரழிக்கப்பட்ட வயதானத் தாயும்… உள்ளம் துடிக்க…

கடவுளே கடல் கடந்து ஓடிவிட்டான்!

தந்தையை இழந்தோம் தவித்தோம் தாயை இழந்தோம் துடித்தோம் அண்ணனை இழந்தோம் அவதியுற்றோம் அக்காளை இழந்தோம் அலறினோம் தங்கையை இழந்தோம் தள்ளாடினோம் தம்பியை இழந்தோம் தடுமாறினோம் அப்படியும்… தாய் நாட்டை மீட்க முடியவில்லையே… கண்ணிழந்து காலிழந்து கையிழந்து கையறு நிலையில் நிற்கும் எங்களை இங்கிருக்கும் எம் மனிதர்களே காப்பாற்றவில்லையெனில் எங்கோ இருக்கும் கடவுளா காப்பாற்றப் போகிறான்? அரசுக்…

எங்கள் கற்பு எங்கே?

கற்புடைப் பெண்டிர் பெய்யெனப் பெய்யுமாம் மழை! எம் நாட்டுப் பெண்டிர் பெய்யெனச் சொன்னால் பெய்யாதா? ஏன்? எங்கள் கற்பு கொள்ளையடிக்கப்பட்ட இலங்கை ராணுவத்திடம் இருக்கிறதே அதனாலா? வீரத் தமிழன் எங்கள் கற்பு பறிபோக ஈனத் தமிழர்கள் ஆனார்களே… ஏன்? பெற்ற வயிறு எரிய பிள்ளையைப் பறிகொடுத்த தந்தையும் தாயும் சகோதர சகோதரிகள் சாக சந்தோஷத்தை இழந்த…

உபதேசங்கள்

நாட்டில் உபதேசம் வீட்டில் உபதேசம் பள்ளியில் உபதேசம் கல்லூரியில் உபதேசம் கடைத்தெருவில் உபதேசம் கண்டகண்ட இடங்களில் உபதேசம் ஊரைவிட்டு ஓடிப் போய்விடலாம் எனில் இயலவில்லை. ஏன்? கேட்ட உபதேசம் தடுக்கிறதே!

உன்னைப் புரியவே இல்லை!

பூமியை அளந்துவிட்டேன் சாமியையும் தெளிந்து கொண்டேன் நரசிம்மராவின் நமுட்டுச் சிரிப்பை அறிந்து கொண்டேன் ஏன்… மன்மோகன்சிங்கின் மௌனத்தையே புரிந்துகொண்டேன் நட்சத்திரங்களின் தொகையும் பட்சமாக எனக்குத் தெரியும் ஆனால்… தோகை உந்தன் மனம் எனக்குப் புரியவில்லையே… சத்தியமாகத் தெரியவில்லையே!

ஊடல் ஊறுகாய் அளவுதானடா!

என்ன சரசமடா உனக்கு பெண்ணை ஆள நினைக்கிறாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறாய் முன்னை நினைவுகள் எனைத் தள்ள தடுமாறிப் போகிறேன் கோபமெனில் வாய் பேசாதோ? ஊடல் ஊறுகாய் அளவுதானடா ஊதிஊதிப் பெரிசாக்கும் உன்  வல்லமையால் வாய்ப் பிளக்கிறேனடா! ஊடலில் ஊஞ்சலாடியே ஊன்றுகோல் காலம் வந்துவிடுமோ? என்னைப் பார்… ஏகாந்த நிலையைப் பார் ஆட்கொள்ளாமல் அவதியுண்டாக்கும் அன்பரசா……

குண்டுகள்!

குண்டுக் குழந்தை அழகு. குண்டுக் கண்கள் அழகு. குண்டுக் கன்னம் அழகு. குண்டுப் பெண் அழகு. குண்டுப் பையன் அழகு. குண்டுப் பயில்வான் அழகு. குண்டு அம்மா அழகு. குண்டு அப்பா அழகு. குண்டுப் பூ அழகு. குண்டுப் பழம் அழகு. குண்டுக் கையெழுத்து அழகு. குண்டு நாய் அழகு. குண்டுப் பூனை அழகு. குண்டைத்…

Page 1 of 41234