கவிதை

வாய்க்கு வஞ்சனை செய்யேன்!

பெட்டிப் பெட்டியாகத் தின்றவள். ‘லட்டு’வை லட்டு லட்டாகவே லவட்டியவள். இப்போது… பிட்டுப் பிட்டுத் தின் என மனம் விட்டு விட்டுத் துடிக்கிறதே! கட்டுக் கட்டுச் சோற்றை கொட்டிக் கொட்டித் தட்டுத் தட்டாகச் சாப்பிட்டவள்… இப்போது அன்னத்தை அண்ணாந்து பார்க்கிறேனே! ஐஸ் கிரீம் எனில் ஆலாய்ப் பறப்பவள்! அதிரசம் எனில் அடிதடி தான்! போளி இலையெனில் காளி…

முத்துச் சிரிப்பு!

முத்துச் சிரிப்பில் முகிழ்ந்தேன் சத்தச் சிரிப்பில் சிலிர்த்தேன்… பஞ்சு போன்ற மெல்விரல் தொட பாதாதிகேசம் பரவசமானது… தேடித் தேடிப் பார்க்கிறேன் ஓடி ஓடி ஒளிகிறாய்! உனை நாடி நாடி நாலு புறமும் நோக்கி வாடி வாடி களைத்துப் போனேன்! காலில் சக்கரமா? சுழன்று சுழன்று ஆடுகிறாய்! கழன்று கழன்று விழும் காப்புகளை எத்தனை முறை தான்…

விலையில்லா மனைவி!

பள்ளி போனதும், பாடம் படித்ததும், சிட்டாய்ப் பறந்து பறந்து விளையாடியதும், வயதுக்கு வந்ததும் வாயிலின் மூலையில் வாலறுந்து உட்கார்ந்ததும், கல்லூரிக்குப் போனதும், காலில் சிறகுக் கட்டி அங்கே இங்கே என்று ஓடிப் பூமியில் பூபாளம் பாடியதும், முன்பின் தெரியாத ஒருவனை அன்பின் வழியது என்று சொல்லிக் கணவனாக்கிய கொடுமையால், நான் ஒன்று சொல்ல அவன் வேறொன்று…

வயது தடை இல்லை!

நாலு எட்டில் நாலு மாடி, எட்டு எட்டில் எட்டு மாடி, பத்து எட்டில் அத்தை வீடு, இருபது எட்டில் இன்பா வீடு, என்று – மான் எனத் துள்ளியவள், இப்போது… தாவித் தாவிக் காலை வைத்தாலும், தெருமுனை நீளம் விடியவில்லையே… இந்த அறுபதில் அல்லாடுகிறேனே… இனி – எழுபதில் என்னவாகும் என்றீர்கள் என்றால்… எகிறிக் குதிப்பேன்!…

யாருமே தேவையில்லை… நிம்மதி!

அவனுக்குப்… பணம் தேவையில்லை… பெண்டு பிள்ளைகள் தேவையில்லை… அம்மா… அப்பா… அண்ணன்… தங்கை… உற்றார்… உறவினர்… ஏன், உலகமே தேவையில்லை… துறவியா? முற்றும் துறந்த ஞானியா? அப்போது ஒரு குரல்… “ஐய்யாமார்களே… நேரமாகுது… சீக்கிரம் வாய்க்கரிசி போடுங்களேன்”!

வேதனை தீரடி

பாவை உந்தன் பார்வையால் பாலும் கசந்ததடி, உந்தன் சேல் கண் சிவந்ததடி, எந்தன் வேல் கண் அழுததடி, நித்திரை போனதடி, நிம்மதி குலைந்ததடி, நேசம் துடிக்குதடி, பாசம் பதறுதடி, வேஷம் இல்லையடி, நாலும் மறந்து எந்தன் வேதனை தீரடி!

இன்னும் எதை இழக்க?

உன் பார்வையே என் பார்வை, எனவே குருடானேன். நீ கேட்பதே நான் கேட்பதால், செவிடானேன். உன் பேச்சு என் பேச்சானதனால், ஊமையானேன். இன்னும் எதை இழக்க? உன் உயிர் என் உயிர் ஆனதனால்… என்னை விடம்மா… உயிரிழக்கச் சம்மதமில்லை, ஓடிப்போகிறேன்!

Page 2 of 41234