கவிதை

எதுவும் சுகமே!

அடி என் காதலி! எல்லாமே பொய் என்பது மெய்யாகிவிட்டது… அதற்காக… பழகியது பஞ்சாகப் போகுமா? உருகியது ஊர்ப் பார்க்கவா? நெஞ்சம் மறக்காது நேசம்… வஞ்சம் இருக்காது நிசம்…. ஒன்று பேசு, இல்லையேல் ஏசு. எதுவும் சுகமே!

உயிர் தரிக்கும் நாள்!

கண்ணே! உன் கண்கள் என்ன காந்தமா? என் கண்களைக் கட்டிவிட்டதே! தோகை மயிலே நான் தோற்றுவிட்டேனடி… நேற்று போல் தெரிகிறது பழகிய நேசம்… வேற்று போல் புரிகிறது விலகும்போது பாசம்… மாய வித்தைக் காட்டி மயக்கும் மங்கையே… நீ என்னை விட்டு விலகும் நாளே நான் உயிர் தரிக்கும் நாள்!

கட்டை அவிழ்த்து விடு!

கண்ணே! உன் கண் அம்புகளின் வேதனையில் சாதனைகள் மறந்தேன். இது நியாயமா? உன் அன்பென்ற கட்டை அவிழ்க்க முடியவில்லையே என்னால். உனக்கெப்படி?

Page 4 of 41234