எங்கள் காலத்தில் ஐந்து வயது நிறைவடைந்த பிறகுதான் எலிமெண்டரி பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படித்தான் என்னையும் என் பெற்றோர் சேர்த்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுதே ஆர்வமிகுதியால் ஒரு சிறுகதை எழுதி அதனால் நான் கந்தலாகிப் போன கதைதான் கீழே வருவது! என் தந்தை தான் தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியவர். அந்நாளில் அரசியல்…
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தது…
சென்ட்ரல் ஸ்டேஷன். லண்டனில் இருந்து தோழி சாந்தா சென்னை வந்திருந்தாள். புட்டபர்த்தி சாய்பாபா அவர்களின் தீவிர பக்தையான சாந்தா, பாபாவின் பிறந்தநாளன்று பெங்களூருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சென்னை வரும்போது பெரும்பாலும் எங்கள் வீட்டில் தங்குவாள். அவளை ஷதாப்தி ரயிலில் ஏற்ற விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் நானும் எனது பெரிய பெண் கவிதாவும் சென்ட்ரலுக்குச் சென்றோம்.…
தெய்வமே தேரில் வீதி உலா வருகிறது!
அது ஒரு சாதாரண குடும்பம். குடும்பத் தலைவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒரே ஒரு பெண். அவரது மனைவி இந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்து விட்டார். எல்லா ஆண்களைப் போலவே பிள்ளைகளை வளர்க்க என்று சொல்லி அவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்து வயது குறைந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டார்.…
பச்சைத் துரோகங்கள்
அவள் நல்ல நிறம். உயரம். மிகவும் அழகானவள். ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடியின் உள்ளே கண்கள் ஒளி மின்னலென பளிச்செனத் தெரியும். மெல்லிய உதடுகளில் எப்போதும் புன்னகை ஓடிக்கொண்டிருக்கும். நளினமானவள்! பிரபலமான கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்துக் கொண்டிருந்தாள். அவளது பெயரை சுந்தரி என்று வைத்துக்கொள்வோமே. அழகுக்கு ஏற்றாற்போன்று வகைவகையான புடவைகள். அதற்கேற்ற வண்ணத்தில் கைவளை மற்றும்…
நாங்கள் பிளாட்ஃபாரம் இல்லாதவர்கள்!
1964-ம் வருடம். வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். மொத்தமே அந்த வகுப்பில் ஒன்பது பேர் தான்! அவ்வகுப்பில் என்னுடன் படித்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கனகமணியை ரயிலில் ஏற்றுவதற்காக நானும் எனது மற்றொரு தோழி உமாவும் சேர்ந்து காட்பாடி ஜங்ஷனுக்குச் சென்றோம். அந்தக் காலத்தில் பட்ட வகுப்பில் முதலாண்டு படிப்பவர்களுக்கு…
கஞ்சி கால்வயிறு…
இப்போது காலம் மாறிவிட்டது. முன்பெல்லாம் எளிமையான வாழ்க்கையைத்தான் மக்கள் விரும்பினார்கள். ஆனால் இப்போது ஆடம்பரம் அதிகமாகிவிட்டது. ஆடம்பரப்பொருட்கள் அத்தியாவசியத் தேவைகளாகிவிட்டன. உண்மைதான். ஆனால் அதற்காக… தொலக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாகனம், எல்லாமே ‘பெரியதாக’ அதிக விலை உயர்ந்ததாக வாங்கவேண்டும் என்று நினைக்கலாமா? தெரிந்தவர், உறவினர், தோழர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே போட்டிபோட்டுக்கொண்டு வாங்குபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக…
மரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும்
சரி, இனி நடப்பவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். நமது வீடுகளில் அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சிகள், தம்பிகள், அண்ணிகள், தாத்தா பாட்டிகள்… இவர்களைப் பற்றி அக்கறை நமக்கு உள்ளதா? காலங்காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு, காலன் (எமன்) வருகின்றவரை ‘ஓய்வு’ கொடுக்காமல் இருக்கின்றோம். இது நியாயமா? நாம் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. உழைத்து, ஓடாகி,…